வெளிநாட்டு T20 லீக்குகளால் இந்தியர்களுக்கும் , தோனிக்கும் வரும் புதிய சிக்கல்…!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் சங்கம் அறிமுகப்படுத்திய சமீபத்திய லீக்கில் உள்ள 6 அணிகளில் ஐந்து இந்திய உரிமையாளர்களுக்கு சொந்தமானது.
இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 3 அணிகளுக்கு சொந்தமானது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் லீக்கின் அனைத்து ஆறு அணிகளும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு சொந்தமானது.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறவுள்ள டுவென்டி-20 லீக் போட்டிகளில், இந்திய கிரிக்கெட் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள அல்லது ஓய்வு பெற்ற, ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் இந்திய வீரர்களை அனுமதிக்க வேண்டாம் என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.
ஐபிஎல்லில் விளையாடும் யாருக்கும் இந்த வெளிநாட்டு லீக்குகளில் ஆலோசகராக செயல்பட வாய்ப்பு கிடைக்காது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி, தென்னாப்பிரிக்க லீக்கில் ஆலோசகராக பணியாற்ற முடியாது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் சங்க செய்தி தொடர்பாளர் கருத்தின்படி தென் ஆப்ரிக்க லீக்கில் ஆலோசகராக தோனி பணியாற்றினால், ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவித்துள்ளார்.
“உள்நாட்டு வீரர்கள் உட்பட எந்த இந்திய வீரரும் அனைத்து வடிவங்களில் இருந்து ஓய்வு பெறும் வரை வேறு எந்த லீக்கிலும் பங்கேற்க முடியாது. எந்த வீரரும் இந்த லீக்களில் பங்கேற்க விரும்பினால், பிசிசிஐ உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்த பின்னரே அவர் அவ்வாறு செய்ய முடியும்” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.