வெஸ்ட் இண்டீஸ் அணியின் முழுநேர ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக கீரன் பொல்லார்டுக்கு பதிலாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) செவ்வாயன்று ஒருநாள் மற்றும் T20I வடிவத்தில் மேற்கிந்திய தீவுகளின் புதிய முழுநேர கேப்டனாக விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெஸ்ட் இண்டீஸை வெள்ளை பந்து (White Ball) கிரிக்கெட்டில் அணியை வழிநடத்திய பின்னர், சமீபத்தில் ஓய்வு பெற்ற கீரன் பொல்லார்டுக்குப் பதிலாக பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் அணியின் புதிய துணை கேப்டனாக தொடக்க வீரர் ஷாய் ஹோப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகிய இரண்டிலும் பூரன் அணியை வழிநடத்த உள்ளார்.
“வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு அற்புதமான பாரம்பரியத்தை உருவாக்கிய பல ஜாம்பவான்களின் அடிச்சுவடுகளை நான் பின்பற்றுகிறேன். “இது உண்மையில் ஒரு மதிப்புமிக்க பாத்திரம், மேற்கிந்திய சமுதாயத்தில் ஒரு முக்கிய நிலை, ஏனெனில் கிரிக்கெட் தான் அனைத்து மேற்கிந்தியர்களையும் ஒன்றிணைக்கும் சக்தியாகும்.
கேப்டனாக நியமிக்கப்பட்டது உண்மையில் எனது வாழ்க்கையின் சிறப்பம்சமாகும், மேலும் நான் அணியை சிறப்பாக இயக்க விரும்புகிறேன் என பூரான் தெரிவித்துள்ளார்.