வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள்,T20 தொடருக்கான இந்திய அணி விபரம்..!

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள்,T20 தொடருக்கான இந்திய அணி விபரம்..!

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மிக மோசமான தோல்வியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனைதொடர்ந்து நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 16ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தநிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

காயம் காரணமாக தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்காத கேப்டன் ரோஹித் சர்மா, தற்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதால் விண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை ரோஹித் சர்மாவே வழிநடத்த உள்ளார்.

தொடர்ந்து சொதப்பி வந்த புவனேஷ்வர் குமார் மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதே வேளையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு குல்தீப் யாதவிற்கு மீண்டும் அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் யுஸ்வேந்திர சாஹலிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தீபக் ஹூடா, ரவி பிஸ்னோய், பிரசீத் கிருஷ்ணா, ஆவேஸ் கான், ஷர்துல் தாகூர், ஸ்ரேயஸ் ஐயர், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் பலருக்கு இடம் கிடைத்துள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாசிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், முகமது சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, ஆவேஸ் கான்.

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மிக மோசமான தோல்வியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

காயம் காரணமாக தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்காத கேப்டன் ரோஹித் சர்மா, தற்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதால் விண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை ரோஹித் சர்மாவே வழிநடத்த உள்ளார்.

அதே போல் இந்த தொடருக்கான இந்திய அணியில் பும்ராஹ், முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டரான ஜடேஜா காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் விண்டீஸ் அணிக்கு எதிரான முழு தொடரிலும் ஜடேஜா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ., அறிவித்துள்ளது. அதே வேளையில் ரவி பிஸ்னோய், ஆவேஸ் கான், ஹர்சல் பட்டேல், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்கள் விண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் போன்ற வீரர்களும் டி.20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டி.20 தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் இஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவி பிஸ்னோய், அக்‌ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், வாசிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஸ் கான், ஹர்சல் பட்டேல்.

#Abdh