வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் டெஸ்ட் – ஒரேநாளில் 13 விக்கட்டுக்கள் தகர்ப்பு…!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் – பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 217 ரன்னில் ஆல் அவுட்

பாகிஸ்தான் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 4 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 ஆட்டங்கள் கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் பவாத் அலாம் அரை சதமடித்து 56 ரன்னில் அவுட்டானார். பாஹீம் அஷ்ரப் 44 ரன்னும், பாபர் அசாம் 30 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடந்து ஆடியது. முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட்டுக்கு 2 ரன்களை எடுத்துள்ளது.

#ABDH

Previous article69 ஆண்டுகால சாதனையை தகர்த்த ரோஹித் ,ராகுல் ஜோடி..!
Next articleInstagram இல் லைக்ஸ்களை அள்ளும் மெஸ்ஸி