வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் சுழற்பந்து வீச்சாளராக மாறிய சுவாரஸ்ய கதை – ஹசரங்க ..!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக ஜொலித்து வரும் ஹசரங்க தன்னுடைய ஆரம்ப காலத்தில் வேகப்பந்து வீச்சாளராகவே செயற்பட்ட விடயத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
லக்மால் டி சில்வா எனப்படும் அவர்களுடைய பாடசாலைக் கால பயிற்சியாளராக செயல்பட்ட லக்மல் டீ சில்வாவே வேகப் பந்துவீச்சாளராக இருந்த தன்னை, சுழற் பந்து வீச்சாளராக மாறுமாறு பணித்ததாக ஹசரங்க தெரிவித்திருக்கிறார் .
குறிப்பாக 17 வயது வரைக்கும் வேகப்பந்து வீச்சு வீசும் சகலதுறை ஆட்டக்காரராகவே தான் கிரிக்கெட்டில் பங்களிப்பை நல்கியதாக பேட்டியொன்றில் தகவல் தெரிவித்தார்.
லக்மல் டீ சில்வா வின் கருத்துப்படி ஸ்பின் பந்து வீச்சாளராக மாற்றம் எடுத்ததாக ஹசரங்க தெரிவித்தார்.
அதன்பின்னர் அடுத்து வந்த 2 ஆண்டுகளில் இலங்கையின் இளையோர் உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது, அதனைத் தொடர்ந்து ஒருசில மாதங்களிலேயே இலங்கையின் தேசிய அணியிலும் ஹசரங்க அறிமுகமானார் என்பதும் நோக்கத்தக்கது.
அதன் பின்னர் கிரிக்கட்டில் என்னவானது என்பது எல்லாம் மிகப்பெரிய வரலாறு.
இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய மிகப் பெரும் சொத்தாக பார்க்கப்படும் ஹசரங்கவின் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருந்தவர் லக்மல் டீ சில்வா என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
T20 தரவரிசையில் 2 ம் இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர் ஹசரங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.
காலி ரிச்மன்ட் கல்லூரியின் தலைமை பயிற்சியாளராக இருந்து தம்மிக்க சுதர்சனவுக்கு உதவி பயிற்சியாளராக திகழ்ந்தவர் லக்மால் டி சில்வா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் புகழ்பூத்த கல்லூரிகளில் ஒன்றான காலி ரிச்மண்ட் கல்லூரி இலங்கையின் தேசிய பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.
தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்க, தனஞ்செய லக்க்ஷன் இவர்களோடு வணிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் ரிச்மண்ட் கல்லூரி உருவாக்கிய தேசிய வீரர்களாவர்.
காலி ரிச்மண்ட் கல்லூரியின் தலைமை பயிற்சியாளராகவும், முன்னாள் இலங்கையின் இளையோர் அணியின் பயிற்சியாளராகவும் திகழ்ந்த தம்மிக்க சுதர்சனவே இப்போதைய இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் என்பதும் சிறப்பு தகவலாகும்.