வேதனையை வெறுப்போடு கொட்டித் தீர்த்த வோர்னர்- பாவம்தான் என்ன செய்வது ?

என் அருமை உங்களுக்கு எல்லாம் புரியாதுடா… வேதனையை ஓபனாக வெளிப்படுத்திய டேவிட் வார்னர்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும் டேவிட் வார்னர் தனது வேதனையை சூசகமாக ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடர்களில் அதிக பலம் கொண்ட அணியாக திகழ்ந்து வந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த வருடத்திற்கான தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது.

இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே ஹைதராபாத் அணி மோசமான தோல்விகளை சந்தித்ததால், அந்த அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கேன் வில்லியம்சன் கேப்டனான பின்பும் ஹைதராபாத் அணி தொடர் தோல்வியையே சந்தித்தது. டேவிட் வார்னர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்பும் பேட்டிங்கில் சொதப்பியதால் அவரை ஆடும் லெவனில் இருந்தும் ஹைதராபாத் நிர்வாகம் நீக்கியது. இதனால் ஹைதராபாத் அணிக்காக இனி டேவிட் வார்னர் எப்போதும் விளையாட மாட்டார் என பேசப்பட்டது. டேவிட் வார்னரும் இதை உறுதி செய்திருந்தார்.

டேவிட் வார்னரை அணியில் இருந்து ஹைதராபாத் நிர்வாகத்தின் முடிவே ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு முறை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னரை அசிங்கப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக ஹைதராபாத் அணியின் அனைத்து வீரர்களும் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் டேவிட் வார்னரை மட்டும் ஹைதராபாத் அணி மைதானத்திற்கே அழைத்து வரவில்லை, அவருக்கு மைதானத்திற்கு வர அனுமதியும் கொடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பெரும்பாலான ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஹைதராபாத் அணியால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும் டேவிட் வார்னர் தனது வேதனையை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

வார்னர் இன்ஸ்டாகிராமில் ரகசிய சங்கேத மொழியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், “உங்கள் முகத்துக்கு எதிராக ஒருவர் உண்மையாக இருப்பது அல்ல முக்கியம், உங்கள் முதுகுக்குப் பின்னாலும் ஒருவர் உங்களுக்கு உண்மையாக இருப்பதுதான் முக்கியம்” என்று தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார்.

ஆனால் இதில் ஒன்றை கவனிக்க வேண்டும், பொதுவாக, முகத்துக்கு எதிராக பேசுவது நேர்மையின், வெளிப்படையின் தன்மை என்று நாம் புரிந்து வைத்திருக்கிறோம் அப்படித்தான் நம்புகின்றனர், ஒருவர் முகத்துக்கு நேராக உண்மையாக இருந்து விட்டு முதுகுக்குப் பின்னால் குத்தலாம் அல்லவா, அதனால்தான் வார்னர் முகநக நட்பது நட்பன்று என்று தொனிக்கும் விதமாகக் கூறி பின்னால் குத்தாதீங்கப்பா என்கிறார்.

#ABDH