வேற லெவல் கோச்.. அதிரடி பேட்ஸ்மேன், பவுலரை பயிற்சியாளராக நியமித்துள்ள சிஎஸ்கே

வேற லெவல் கோச்.. அதிரடி பேட்ஸ்மேன், பவுலரை பயிற்சியாளராக நியமித்துள்ள சிஎஸ்கே

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு ஒவ்வொரு அணியும் தயாராகி வருகிறது. சிஎஸ்கே அணி இம்மாதம் இறுதியில் சென்னையில் பயிற்சி முகாமை தொடங்க இருக்கிறார்கள். இந்த நிலையில் சிஎஸ்கே அணி தங்களுடைய பயிற்சியாளர் குழுவை விரிவாக்கம் செய்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பிராவோ இருந்த நிலையில் அவர் கேகேஆர் அணிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஸ்ரீதர் ஸ்ரீ ராம் என்ற அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரை நியமித்திருக்கிறது. இவர் சிஎஸ்கே அணியின் துணை பவுலிங் பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக ஸ்ரீதர் இருந்துள்ளார். அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் இருந்து விலகிய ஸ்ரீதர், ஆர்சிபி அணிக்கு சென்றுள்ளார். இதேபோன்று டி20 உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் வங்கதேச அணிக்காக செயல்பட்ட ஸ்ரீதர் 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் துணைப் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுடன் பணிபுரிந்த ஸ்ரீதர், தற்போது சிஎஸ்கே அணிக்கு துணை பந்துவீச்சு பயிற்சியாளராக சேர்ந்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீதர் கடந்த 1992 93 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய U 19 அணியில் இடம் பெற்றிருந்தார். அந்த தொடரில் அவர் 29 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதே போன்று பேட்டிங்ளும் அபாரமாக விளையாடக்கூடிய ஸ்ரீதர், ஒரே சீசனில் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதில் ஒரே ஆண்டில் அவர் ஐந்து சதம் விளாசி இருந்தார். இதன் காரணமாக ஸ்ரீதர் இந்திய அணியிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்திய அணிக்காக 8 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரீதர் பந்துவீச்சில் ஒன்பது விக்கெட்டுகளும் பேட்டிங்கில் மொத்தமாக ஒரு அரை சதம் உள்ளிட்ட 81 ரன்களும் அடித்திருந்தார். ஸ்ரீதருக்கு பெரிய அளவு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு பிசிசிஐக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட அரசியல் தொடரில் சென்னை சூப்பர் ஸ்டார் மற்றும் அகமதாபாத் ராக்கெட்ஸ் அணிகளுக்காக ஸ்ரீதர் விளையாடினார். இதை தொடர்ந்து பிசிசிஐ வழங்கிய பொது மன்னிப்பில் அந்த தொடரை விட்டு விலக மீண்டும் இந்திய கிரிக்கெட்டுக்குள் அவர் வந்தார்.இடதுகை சுழற் பந்துவீச்சாளரான ஸ்ரீதர், அஸ்வின், ஜடேஜா, ஸ்ரேயாஸ் கோபால்,நூர் அகமது, தீபக்ஹூடா ரச்சின் ரவிந்த்ரா போன்ற வீரர்களுக்கு பக்க பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleயாராலும் தொட முடியாத சச்சினின் இந்த ODI சாதனையை கோலி எட்டுவார்.. ரிக்கி பாண்டிங் அதிரடி பேச்சு
Next articleஆப்கானிஸ்தானின் அபார வளர்ச்சி..!