நம்ம மைக்கேல் வாகனை ஆயிரத்தெட்டு கிண்டல் பண்ணாலும், பிளேயர் மேனேஜ்மெண்ட்ல, அந்தாளு கில்லாடி!!!
பீட்டர்சன், ஃபிளிண்டாஃப் என்கிற இரண்டு பிரச்சனைக்குரிய சூப்பர் ஸ்டார்களை, அழகா வேலை வாங்கி நிறைய மேட்ச் ஜெயிச்சிருப்பார்.
அவர் இருக்கிற வரை, பீட்டர்சன் ஒரு பிராப்ளமேட்டிக் பெர்சனா, இங்கிலாந்து டிரஸ்ஸிங் ரூம்ல தெரியாமல் பார்த்துக்கிட்டார். அவர் அப்படி பார்த்ததுனாலதான், இங்கிலாந்துக்கு ஒரு பெரிய சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் கிடைச்சார்.
அதே கதைதான் மும்பை இந்தியன்ஸுக்கும், பொல்லார்டுக்கும், களத்தில ரொம்பவே அக்ரஷனான பிளேயர் பொல்லார்ட். அவரை ஒரு வருஷம் இல்ல, கிட்டதட்ட 11 வருஷமா அழகா மேனேஜ் பண்ணி, ஏகப்பட்ட வெற்றிகளை, அவர் மூலமா மும்பை இந்தியன்ஸ் பெற்றிருக்கு.
ஃபார்ம் அவுட் ஆகுறது, எல்லாருக்கும் சகஜம்தான். ஆனால் அந்த ஃபார்ம் அவுட் மூலமா, அணியில் இருந்து வெளில தூக்குறதுக்கு முன்னாடி, இவர் அடுத்த சீசன்ல நமக்கு உபயோகமாக இருப்பாரான்னு அணி நிர்வாகம் யோசிக்கும்.
2018ல பொல்லார்ட் படு மோசமா ஆடியிருப்பார், மத்த டீமா இருந்தா, இந்நேரம், அவரைத் தூக்கி வெளிய போட்டுருப்பாங்க. 9 மேட்ச் ஆடி, 133 ரன்களை மட்டும்தான் அடிச்சிருப்பார். ஆனால் MI அடுத்த சீசனுக்கு அவரை பேக் பண்ணாங்க. 9 வருஷம் இருந்த டீம்ல இருந்த பிளேயரை, ஒரு மோசமான சீசனால தூக்கக் கூடாதுன்னு, மும்பை எடுத்த முடிவோட பலனை அடுத்து வந்த இரண்டு சீசன்ல அனுபவிச்சாங்க .
2014-ல இருந்து சன்ரைசர்ஸுக்கு ஆடிட்டு இருக்கும் வார்னர், ஒவ்வொரு சீசனுக்கும் குறையாமல் 500+ ரன்களை அடிச்சிருவார். 2016-ல எல்லாம் கோலிக்குச் சரிசமமா, வெறியாட்டம் ஆடிருப்பார். 848 ரன்கள் அடிச்சு, அந்த வருஷக் கோப்பையையும் வாங்கிக் கொடுத்துருப்பார்.
ஐபில் பேட்டிங் ரெக்கார்ட் எல்லாம் எடுத்துப் பார்த்தா, எல்லா ரெக்கார்ட்லயும், பெரும்பாலும் டாப் 3க்கு உள்ள உக்காந்திருப்பார், வார்னர். ஆனால், அப்படிப்பட்ட பேட்ஸ்மேனை சன்ரைசர்ஸ் நிர்வாகம் வேண்டாம் வெளில போகட்டும்ன்னு முடிவை எடுத்துடுச்சு.
பிளேயர்ஸ் மேனேஜ்மெண்ட்ல சிறந்து விளங்குற டீம்தான், இங்க தொடர்ந்து சக்ஸஸ்ஃபுல் டீமா இருக்க முடியும். அதைத்தான், CSK, MI, KKR மாதிரி அணிகள் பண்ணுது, ஆனால் அதை மற்ற அணிகள் பண்ணத் தவறி, தங்களோட ஸ்டார் வேல்யூவையும் இழந்துடுது.
பட்லர் எப்படி மும்பைனா, துரத்தித் துரத்தி அடிக்கிறாரோ, அதேமாதிரி வார்னரும், அடுத்த சீசனில், சன்ரைசர்ஸர்ஸுக்கு எதிரா அப்படின்னா, வெறிகொண்டு ஆடப்போறார்.
#அய்யப்பன்
விளையாட்டு.com எங்கள் தளத்தின் இந்த வீடியோவையும் பாருங்கள். ????