ஶ்ரீ லங்கா கிரிகெட்டுக்கு புதிய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை.

ஶ்ரீ லங்கா கிரிகெட் நிறுவனத்திற்கு புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு, தான் பெயர்களை பரிந்துரைத்துள்ளதாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார  அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி,  வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் முன்னேற்றத்தை இந்த குழு கண்காணிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, முன்னாள் கிரிகெட் வீரர்கள் உள்ளிட்ட நபர்களை இந்தக் குழுவுக்கு நியமிக்க எதிர்பார்பார்ப்பதாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார  அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா கிரிகெட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகத்தினர், BORN AGAIN என்ற பெயரில், மதம் சார்ந்த நிகழ்ச்சி நிரலொன்றைக் கொண்டு செல்வதாக வெளியாகும் செய்திகளை ஶ்ரீ லங்கா கிரிகெட் மறுத்துள்ளது.

ஶ்ரீ லங்கா கிரிகெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய அணியை பிரதிநித்துவப்படுத்துகின்ற வீரர்கள், பயிற்சியாளர்கள், தெரிவுக் குழு அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினரை இலக்குவைத்து இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது எனவும், இது தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிடுவதாகவும், ஶ்ரீ லங்கா கிரிகெட் குறிப்பிட்டுள்ளது.

#Capitalnews