ஶ்ரீ லங்கா கிரிக்கட்டில் நிகழ்ந்த திடீர் பதவி விலகல்…!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போட்டி இயக்குநராக (Director) இரண்டு வருடங்களாக கடமையாற்றிய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் ரவின் விக்கிரமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களால் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு முதல் புதிதாக உருவாக்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போட்டி இயக்குநராக இருந்து வரும் விக்ரமரத்ன, உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர்.

தனது ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த விக்கிரமரத்ன, “நாங்கள் சிறப்பாக செய்து வரும் பாத்திரத்தை புதிய நபரிடம் ஒப்படைப்பதற்கு இதுவே சிறந்த தருணம்” என்று கூறினார்.

திரு.விக்ரமரத்ன பதவி விலகியதையடுத்து, தற்போது இலங்கை கிரிக்கெட் ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக இருக்கும் சமந்த தொடன்வெலவை அந்தப் பதவிக்கு நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

செயற்குழு உறுப்பினராகவும் உள்ள தொடன்வெல, நாட்டின் முதன்மையான கிரிக்கெட் போட்டியை LPL பிரதிநிதித்துவப்படுத்தும் Director  பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திரு.தொடன்வெல 1991 முதல் 1997 வரை கொழும்பு SSC விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடியுள்ளார்.

தொடன்வெல தற்போது மெர்கன்டைல் ​​டீ தயாரிப்பு தரகர்களின் நிர்வாக இயக்குநராக உள்ளார். கொழும்பு தேயிலை தரகர்கள் சங்கத்தின் தலைவராகவும் திரு.தொடன்வெல உள்ளார்.