ஶ்ரீ லங்கா கிரிக்கட் அதிகாரிகளுக்கு ரோஷேன் சில்வா எழுதியிள்ள உருக்கமான கடிதம்- அற்புத திறமையாளனை பயன்படுத்த தவறிய இலங்கை கிரிக்கட்…!

ரோஷேன் சில்வா தனது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 2017 தனது அறிமுக போட்டியில், ஒரு சிறந்த அரை சதத்தை அடித்தார்.

33 வயதான ரோஷன், அதன் பின்னர் 12 டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களுடன் 702 ரன்கள் எடுத்துள்ளார்.

அவரது கடைசி சர்வதேச போட்டி ஜனவரி 2019 இல் பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இருந்தது.

இந்த மாத ஆரம்பத்தில் முடிவடைந்த SLC சூப்பர் லீக் தொடரில், அவர் ஆறு இன்னிங்ஸ்களில் ஒரு சதம் (174*) மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 304 ரன்களை எடுத்தார்,

ஆனால் பின்னர் கோவிட்-19 க்கு இலக்கானதால் போட்டிகளில் பங்கேற்க முடியாது பின்னர் அவர் வெளியேறினார்.

லீக்கின் இறுதி கட்டங்களில் அவர் குணமடைந்த சில நாட்களுக்குப் பிறகு, இங்கிலாந்தில் லங்காஷயர் லீக்கில் விளையாடுவதற்கான முடிவை எடுத்து  மின்னஞ்சல் மூலம் ஏப்ரல் 18 அன்று SLCக்குத் தனது தீர்மானத்தை தெரிவித்தார்.

 

இப்போது ரோஷேன் சில்வா ஒரு குழப்பத்தில் இருக்கிறார், அதாவது பங்களாதேஷில் நடைபெறவுள்ள டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கான உத்தேச அணியில் அவர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், மீண்டும் இலங்கை வந்து 2 KM உடற்தகுதி தேர்வில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

எவ்வாறாயினும்,ரோஷேன் சில்வா மீண்டும் இலங்கை திரும்புவதற்கான டிக்கெட்டை வாங்கும் நிலையில் அவர் இல்லை, அதைவிடவும்
அவர் இறுதி டெஸ்ட் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் திரும்பி வந்து உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்த ரூ. 500,000 செலவாகும் என எண்ணுகிறார்.

இது இங்கிலாந்தில் உள்ள அவரது தற்போதைய ஒப்பந்தத்தை பாதிக்கும் என்பதுடன் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்க்கை நடத்த எந்த ஊதியமும் இல்லாமல் போகும் நிலையையும் உண்டுபண்ணும் எனலாம்.

“நான் நான்கு தொடர்களுக்கு பெஞ்ச் செய்யப்பட்டேன். இந்தியாவுக்கு எதிரான முந்தைய தொடருக்கான இறுதி 20 பேர் கொண்ட அணிக்கு அவர்கள் என்னை நினைவுபடுத்தவில்லை, இதற்கு முன்பு நான் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதால் எனக்கு அழைப்பு வரும் என்று நம்பினேன்.

அவர்கள் (தேர்வுக்குழு) எனக்கு வாய்ப்பளிக்காததால் நான் SLC அதிகாரிகளிடம் இது பற்றி விசாரித்தேன், ஆனால் அவர்கள் உறுதியான பதிலை அளிக்கத் தவறிவிட்டனர்.

கடந்த நான்கு தொடர்களில் நான் இறுதி 15 பேர் கொண்ட அணியில் கூட சேர்க்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது எங்களுக்கு ஊதியம் கிடைக்க வழி இல்லை.

எனக்கு விளையாட எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை, நான் இறுதி அணியில் கூட இல்லை, மேலும் எனக்கான ஒப்பந்தமும் இல்லை.

கடந்த 36 மாதங்களாக இங்கிலாந்து என்னை அழைத்து வருகிறது. நான் இங்கிலாந்தில் விளையாடும் போதெல்லாம், அவர்கள் (SLC) என்னை அணியில் சேர்த்தனர். நான் நாட்டுக்காக விளையாட விரும்பி அதனை முடித்துக்கொள்வேன் .

இருப்பினும், நான் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நான் ஊதியம் பெறாமலோ அல்லது கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறாமலோ ஹோட்டல்களில் நேரத்தை வீண்டித்து பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டேன் .

கடந்த 18 மாதங்களாக நான் எதையும் சம்பளமாக பெறவில்லை, என்று இங்கிலாந்தில் இருந்து மின்னஞ்சல் மூலமாக ரோஷேன் சில்வா ஶ்ரீலங்கா கிரிக்கட்டுக்கு தெரிவித்துள்ளார்.

“அவர்கள் புதிய ஒப்பந்தங்களை வரைந்துள்ளனர், ஆனால் அதில் கூட எனது பெயர் சேர்க்கப்படவில்லை. உள்நாட்டு ஒப்பந்தம் (Domestic Contract) கூட எனக்கு வழங்கப்படவில்லை என்று அறிகிறேன்.

நான் கிரிக்கெட் விளையாடுவது பெஞ்சை சூடுபடுத்த அல்ல. எனவே, நான் SLC CEO ஆஷ்லி டி சில்வாவுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன், மற்றவர்களுக்கும் எனது முடிவைத் தெரிவித்து, இங்கிலாந்தின் சிறந்த லீக்கான லங்காஷயர் லீக்கில் விளையாட உள்ளேன்.

தேவைப்படும் போது எனது நாட்டிற்காக விளையாடவும் தயாராக உள்ளேன் எனவும் ரோஷேன் சில்வா மேலும் தெரிவித்தார்.

விஷயங்கள் எப்படி மாறியது என்பது குறித்து விரக்தியடைந்த சில்வா, தனது நிலைமை குறித்து மேலும் விளக்கினார், அங்கு 33 வயதான அவர் எப்போதும் தகுதியின் அடிப்படையில் அணியில் இடம் பெற விரும்புவதாகவும், அவர் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பது குறித்து ஏமாற்றமடைவதாகவும் கூறினார்.

“நான் எந்த எம்.பி., தேர்வாளர் அல்லது எந்த எஸ்.எல்.சி அதிகாரிக்கும் பின்னும் என் தேர்வுக்காக சென்றதில்லை.

முற்றிலும் தகுதியின் அடிப்படையில் விளையாடியுள்ளேன், வேறு எந்த பலனும் அல்லது யாருடைய செல்வாக்கும் காரணமாக அல்ல.

அவர்கள் (SLC) என்னை ஒரு டிக்கெட்டை வாங்கச் சொன்னார்கள், பின்னர் உடற்தகுதி தேர்வுத் தேவையின் ஒரு பகுதியாக 2 KM ஓட கொழும்புக்குத் திரும்பச் சொன்னார்கள்.

நான் சமீபத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், தூரத்தை ஓடுவதற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும், நான் அணிக்கு விளையாடுவேன் என்றும், பின்னர் உடற்தகுதி தேர்வை நடத்துவேன் என்றும் அவர்களிடம் கூறினேன்.

ஒரு டிக்கெட்டின் விலை இப்போது உயர்ந்துள்ளது என்பதை நான் அவர்களிடம் தெளிவாக தெரிவித்தேன்.

500,000 என்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால், குறைந்த பட்சம் எனது போட்டிக் கட்டணத்தில் இருந்து அதை ஈடுகட்ட ஒரு சலுகை தருமாறும் அவர்களிடம் கேட்டேன்.

ஆனால், இன்றுவரை அணி மேலாளர் உட்பட SLC தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவில்லை. இலங்கையுடனான எனது உடனடி வாய்ப்புகள் தொடர்பான நிலைமை அதுவாகும்” என சில்வா கூறினார்.

ஆனால் நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை எனவும் எதிர்காலத்தில் இலங்கை அணிக்காக விளையாடுவது தொடர்பில் விருப்பமில்லாமலில்லை  என்று அவர் உறுதியளித்தார்.

“நான் நிரந்தரமாக விளையாட இங்கிலாந்து செல்லவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். லீக் முடிந்ததும் நான் இலங்கை திரும்புவேன் எனவும் ரோஷேன் சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறுகின்ற உள்ளூர் போட்டிகளில் 50 க்கும் மேற்பட்ட சராசரியை தொடர்ச்சியாக பேணிக்க்கொண்டு ,நெடுங்காலமாகவே வாய்ப்புக்காக காத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரரை SLC எவ்வாறு பயன்படுகிறது என்பதற்கு ரோஷன் சில்வா உதாரணம் .

இலங்கை கிரிக்கெட் மத்திய வரிசையை பலப்படுத்துவதற்கு தடுமாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அதனை எதிர்கொள்வதற்கு தகுதியான ஒருவர் இல்லாத நிலையில் ரோஷன் சில்வாவெ சரியாக பயன்படுத்தி இருக்கலாம் என்பதே விளையாட்டு.Com கருத்தாகும்.

இலங்கை கிரிக்கட் இந்த மாதிரியான திறமையாளர்களை சரியாக பயன்படுத்தாமல் தவறிவிட்டது ரோஷன் செல்வா மட்டுமல்ல, இந்தப் பட்டியல் இன்னும் தொடர்கதையாகின்றமைதான் வேதனைக்குரியது.