ஷஹீன் அஃப்ரிடி 15 கோடிக்கு IPL ஏலம் -அஸ்வின் தெரிவித்த கருத்து…!

இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பங்கேற்பதில்லை.

அவர்கள் 2008 இல் முதல் பதிப்பில் மட்டுமே விளையாடினர், மேலும் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷதாப் கான் மற்றும் ஷாஹீன் அப்ரிடி போன்ற சிறந்த வீரர்கள் காணப்படுகின்றனர்.

இந்தியாவின் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்துப்படி, 22 வயதான ஷாஹீன் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தின் ஒரு பகுதியாக இருந்திருந்தால், அவர் மிகவும் பெறுமதியான ஒப்பந்தத்தைப் பெற்றிருப்பார்்என தெரிவித்தார்.

“ஐபிஎல் ஏலத்தில் ஷஹீன் அப்ரிடி இருந்திருந்தால் எவ்வளவு பைத்தியமாக இருந்திருக்கும் என்று நான் நிறைய யோசித்தேன். ஒரு உயரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் புதிய பந்தில் ஆட்டத்தை அமைத்து, யார்க்கர்களை இறக்கும் போது  அவர் ஐபிஎல் ஏலத்தில் இருந்திருந்தால் 14-15 கோடிக்கு போயிருப்பார் என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.

ஆசிய கோப்பையில் முழங்கால் காயம் காரணமாக பாகிஸ்தான் அணி ஷாஹீன் இல்லாமல் உள்ளது, ஆனால் ஷாஹீன் அப்ரிடி இல்லாத போதிலும், பாகிஸ்தான் அணியில் பல அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்பதை அஷ்வின் எடுத்துரைத்தார்.

அனைத்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களும் தொடர்ந்து 140-145 கி.மீ் வேகத்தில் பந்து வீசுவதெல்லாம் பாராட்டத்தக்கது எனவும் அஸ்வின் தெரிவித்தார்.

2022 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்கிற்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களுக்கு அவர் இணைக்கப்படவில்லை.