ஷஹீன் ஷா அஃ்ரிடி புதிய உலக சாதனை – PSL சாம்பியனானது லாஹூர் குவலென்டேர்ஸ்…!

பிஎஸ்எல் 2022: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கலந்தர்ஸ்

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. நடைபெற்ற இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் – லாகூர்  அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 69 ரன்களையும், ஹேரி ப்ரூக் 41 ரன்களையும் சேர்த்தனர். சுல்தான்ஸ் அணி தரப்பில் ஆசிஃப் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய முல்தான் சுல்தான்ஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் 19.3 ஓவர்களில் முல்தான் சுல்தான்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களைச் சேர்தது. கலந்தர்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி பிஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற லாகூர் அணியின் மூலமாக அணித்தலைவர் ஷஹீன் ஷா அஃ்ரிடி புதிய உலக சாதனை படைத்தார்.

இருபத்தொரு வயதில் ஒரு Franchise  கிரிக்கெட் போட்டி ஒன்றின் சாம்பியன் மகுடமாக அணியின் தலைவரான இளவயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

22 வயதில் ஸ்டீவ் ஸ்மித் Big Bash Leaque கிண்ணம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அதனை ஷஹீன் முறியடித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.