ஷானக, சமீரவுக்கு ILT20 லீக் போட்டிகளில் வாய்ப்பு…!

இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக மற்றும் துஷ்மந்த சமீரவா ஆகியோரை UAE ?? யில் இடம்பெறவுள்ள ILT20 போட்டிகளில் துபாய் கேப்பிட்டல்ஸ் பெரும் தொகைக்கு தமது அணியில் இணைந்துள்ளது.

கிரிக்கெட் தற்போது பெரும் வணிக மதிப்பு கொண்ட விளையாட்டாக மாறியுள்ளது மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் பிரீமியர் லீக் போட்டிகள் அதற்கு பெரும் காரணியாக மாறியுள்ளது.

அதன்படி, ஃப்ரான்சைஸ் (Franchise) கிரிக்கெட் லீக்கில் சேரும் புதிய போட்டி சர்வதேச லீக் T20 (ILT20) ஆகும், இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்த திட்டமிட்டுள்ள சமீபத்திய சர்வதேச இருபது-20 லீக் தொடராகும்.

 

முதன்முறையாக நடைபெறும் இந்தப் போட்டியில் 6 அணிகள் மோதுகின்றன. இதேவேளை, ILT20 போட்டியில் பங்கேற்கும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி இலங்கை T20 மற்றும் ODI அணித்தலைவர் தசுன் ஷானக்கவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

மேலும், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிரவை தங்கள் அணியில் இணைக்க முடிவு செய்துள்ளனர்.

துபாய் கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளர்களுக்கு சொந்தமானது. தசுன் ஷானக மற்றும் துஷ்மந்த சமிர ஒப்பந்தம் செய்யப்பட்டதாக டுபாய் கேபிடல்ஸின் உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.