ஷானக தலைவராக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி -புள்ளிவிபரங்கள் என்ன சொல்கின்றன ?

ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நாளில் (07) தசுன் ஷானக இலங்கை கிரிக்கெட் Short format முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார், ஒரு வருடத்திற்குப் பிறகு சில குறிப்பிடத்தக்க வெற்றிகள் மற்றும் தனிப்பட்ட சாதனைகள் ஷானக மற்றும் இலங்கை அணி வந்திருக்கிறது, அவற்றைப் பார்ப்போம் ?

◾இலங்கை இந்தியாவுடனான T20I தொடரை 2-1 என வென்றது, இந்தியாவிற்கு எதிரான முதல் இருதரப்பு T20I தொடர் வெற்றியாகவும் அமைந்தது.

◾இலங்கை தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட தொடரில் விளையாடியது, இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது, இது 8 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ODI தொடர் வெற்றியாக பதிவு செய்யப்பட்டது.

◾22 ஜனவரி 2022, ஷானக ஜிம்பாப்வேக்கு எதிராக 102 ரன்களுடன் ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார்.

◾ஜூன் 11, 2022 அன்று, ஷனகா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேட்ச்-வின்னிங் பேட்டிங் செய்தார். கடைசி மூன்று ஓவர்களில் இலங்கைக்கு 59 ரன்கள் தேவைப்பட்டது. 12 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த ஷானகா, அடுத்த 13 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார், இலங்கை ஒரு பந்து மீதம் உள்ள நிலையில் அவர்களின் இலக்கை அடைந்தது. பின்னர் ஷானக அரைசதம் அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

◾கடந்தமாதம் 30 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது.

◾ 2021 ஷானக 12 ODI ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டியில் ஆட்டமிழக்காமல் மொத்தமாக 247 ரன்கள் எடுத்தார். சராசரி 22.5 மற்றும் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் அமைந்தது.

◾2022 ஷானக 7 ODI ஆட்டங்களில் விளையாடி 171 ரன்கள் எடுத்தார் ஒரு நாட் அவுட், அதிகபட்சம் 101 ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ??. அவரது சராசரி 25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 98 மற்றும் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அவற்றில் உள்ளடக்கம்.

◾2021 ஷானக 14 T20 இன்னிங்ஸ்களில் விளையாடி 224 ரன்கள் எடுத்தார், அதிகபட்சம் 50 , 20.6 சராசரி மற்றும் 100.4 ஸ்ட்ரைக் ரேட். 16 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களும்்உள்ளடக்கம்.

◾2022 ஷானக 11 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி 308 ரன்கள் எடுத்தார், அதிகபட்சம் 74* இந்தியாவுக்கு எதிராக பெறப்பட்டது. ?? ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 177 ரன்களைத் துரத்தியதுடன் 50 ரன்கள் எடுத்தது இந்த ஆண்டு புள்ளிவிவரங்களின் சிறப்பம்சமாகும். இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக சராசரி 44 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 145. 25 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்கள் உள்ளடக்கம் .

ஆகமொத்தத்தில் இந்த புள்ளிவிபரங்கள் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை கடந்த 1 வருடமாக திருப்திப்படுத்தி இருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வியாகும் .