ஷிரேயாஸ் ஐயரை கிளீன் போல்ட் ஆக்கிய உம்ரன் மாலிக்- துள்ளிக்குதித்த டேல் ஸ்டெயின் ,சுவாரஸ்ய வீடியோ …!

ஷிரேயாஸ் ஐயரை கிளீன் போல்ட் ஆக்கிய உம்ரன் மாலிக்- துள்ளிக்குதித்த டேல் ஸ்டெயின் ,சுவாரஸ்ய வீடியோ …!

இந்தியாவில் இடம்பெற்றுவரும் 15வது ஐபிஎல் போட்டி தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் பதிவானது .

KKR பவர் பிளேயில் மிக வேகமாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ,ஆயினும் நிதிஸ் ரானா , ரஸ்ஸல்  ஆகியோருடைய சிறப்புத் துடுப்பாட்டம் பங்களிக்க அந்த அணி 176 ஓட்டங்களை 6 விக்கெட்டுகளை இழந்து பெற்றது.

இதில் SRH ன் வேகப் புயல் என வர்ணிக்கப்படும் உம்ரன் மாலிக் பந்துவீச்சில் கொல்கத்தாவின் அணித்தலைவர் ஐயர் கிளீன் போல்டானார் .

அந்த சமயத்தில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத பந்து வீச்சு பயிற்சியாளர் டேல் ஸ்டெயின் துள்ளிக் குறித்து முத்தையா முரளிதரனுடன் மகிழ்சியைப் பகிர்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

வீடியோ இணைப்பு ?