ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை வென்று வரலாறு படைத்தது பார்சிலோனா…!
கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு முக்கியமான போட்டி நேற்றைய நாளில் இடம் பெற்றிருந்தது.
ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதிய இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க, நேற்றைய போட்டியில் இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் பார்சிலோனா வெற்றி பெற்றிருக்கின்றது.
கால்பந்து உலகின் பிரபல நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி ,பார்சிலோனா கழகத்தை விட்டு பிரிந்ததற்குப்பின் அந்த அணிக்கு கிடைத்த முதல் வெற்றியாக இந்த கோப்பை பார்க்கப்படுகிறது .
அவர்களுடைய பரமவைரிகளான ரியல் மாட்ரிட் அணியை தோற்கடித்து இந்த மகுடத்தை வென்றிரைக்கிறார்கள், முகாமையாளர் ஷவி அவருடைய பயிற்றுவிப்பைக்கும் கிடைத்திருக்கின்ற அற்புத மகுடமாக இந்த கோப்பை பார்க்கப்படுகிறது.
பார்சிலோனா இப்போது Spanish super cup மகுடத்து வரலாற்றில் 1️⃣4️⃣ முறையாக வென்றுள்ளது. 🔥
• 1983
• 1991
• 1992
• 1994
• 1996
• 2005
• 2006
• 2009
• 2010
• 2011
• 2013
• 2016
• 2018
• 2023 ✅️
ஆதிக்கம். 🙌
#பார்சிலோனா #எல்கிளாசிகோ #Barcelona #Elclassico