இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக மிக மோசமான பின்னடைவுகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மாத்திரமல்லாது இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுடைய கடுமையான அதிருப்தியை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர் .
அண்மையின் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரையும் சொந்த மண்ணில் வைத்து 2-1 என்று இலங்கை அணி இழந்த நிலையில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்றைய நாளில் இலங்கை கிரிக்கெட்டின் முக்கியஸ்தர்கள் உடனான சந்திப்பில் அதிரடி தீர்மானங்களை மேற்கொண்டு அறிவித்திருக்கிறார் .
இதன் அடிப்படையில் புதிய தேர்வு குழு அமைக்கப்படவுள்ளது.
போட்டி மிக்க கழக மட்டப் போட்டிகள் ,மாகாணமட்ட போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
கிரிக்கட் வீரர்கள் ஒழுக்கத்திலும் ,உடற்தகுதியிலும் சிறப்பாக செயல்படுவதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கான தேர்வு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது .
அதோடு அணியின் இயக்குனர் (Director)
அணியின் ஆலோசகர் (Mentor) ஆகியோர் தலைமை பயிற்சியாளர்களுக்கு உதவிகளை வழங்கும் முகமாகவும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன .
இனி வரப்போகும் நாட்களில் இவ்வாறான அதிரடியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பதோடு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் இந்த அதிரடியான உத்தரவு அதீத நம்பிக்கைகளையும் தோற்றுவித்துள்ளது.
நேற்று இலங்கை அணியின் தலைமை தேர்வாளர்கள் இருந்த அசந்த டீ மெல் பதவி விலகி இருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.