ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தேர்தல்- வெற்றி பெற்றவர்கள் விபரம்…!

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தேர்தல் இன்றைய நாளில் நிறைவுக்கு வந்துள்ளது, அதன் அடிப்படையில் 17 ஆண்டுகளின் பின்னர் தேர்தலில் போட்டியின்றி ஒரு தலைவர் தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தலைவரான ஷம்மி சில்வா தலைமையிலான குழுவினரே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மதிவாணன், நிஷாந்த ரணதுங்க, பந்துல வர்ணபுர ஆகியோர் தேர்தலில் இருந்து விலகி கொண்ட நிலையிலேயே ஷம்மி சில்வா தலைமையிலான குழுவினர் போட்டியின்றி பதவிநிலைகளை அடைந்துள்ளனர்.

 

அதன்படி கிரிக்கெட் சபை தலைவராக ஷம்மி சில்வாவும்,
Dr. ஜயந்த தர்மதாஸ -உதவி தலைவர்
ராவின் விக்ரமரத்ன -உதவி தலைவர்
மொஹான் டீ சில்வா -செயலாளர்
லசந்த விசக்ரமசிங்க -பொருளாளர்
கிரிஷாந்த காப்புவாத்தே -உப செயலாளர்
சுஜீவ கோடலியடட -உப பொருளாளர் ஆகியோர் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டை நிர்வகிக்கும் குழுவில் அங்கத்தவர்களாகியுள்ளனர்.

இவர்களுக்கான பதவிக்காலம் அடுத்துவரும் 2 ஆண்களுக்கானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வவுனியா கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், வடமாகாண கிரிக்கெட் சங்க தலைவருமான ரதீபன் பாடசாலை அபிவிருத்திக்கு குழுவின் அங்கத்தவராகவும் தேர்வாகியுள்ளார்.