ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மேற்கொண்ட சிறப்பு தீர்மானம்…!

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட உள்ளூர் தொடரில் சிறப்பு திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கான பரிசுத்தொகை தொடர்பில் விமர்சனகள எழுந்தன.

இதனை அடுத்து குறித்த வீரர்களுக்கான பரிசுத்தொகைகளை மாற்றியமைத்து அவர்களுக்கு தலா 5 லட்சம் அடிப்படையில் பரிசுத்தொகைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

மேஜர் கிளப் ‘A’ லீக் போட்டியின் 2019/2020 இன் சிறந்த வீரர்களுக்கான பரிசில்களை அதிகரிக்க எஸ்.எல்.சி.யின் செயற்குழு முடிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று அறிவித்துள்ளது.

போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரர் லஹிரு உதாரா (NCC) மற்றும் சிறந்த பந்து வீச்சாளர் துவிந்து திலகரத்ன (BRC) ஆகியோருக்கு தலா 450,000 ரூபா நிதி மேலதிகமாக வழங்கப்படும்.

போட்டியின் விருது வழங்கலின் போது அந்தந்த வீரர்களுக்கு ஏற்கனவே 50 ஆயிரம் ரூபா பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், CCC யின் ஆட்டக்காரர் ஆஷான் பிரியஞ்சனுக்கு தொடர் நாயகனுக்கான விருதாக 100,000 பரிசுத்தொகையும் மற்றும் 2 மில்லியன் மதிப்புள்ள கார் என்பனவும் வழங்கப்பட்டது. இவருக்கும் மேலதிகமாக 4 லட்சம் வழங்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாக செயல்படும் வீரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பரிசுத்தொகை குறைவானது என்று எழுந்த விமர்சனங்களுக்கு பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.