ஹசரங்கவின் அதிரடியில் தனஞ்செய டி சில்வா தலைமையிலான அணி இலகு வெற்றி ..!

ஹசரங்கவின் அதிரடியில் தனஞ்செய டி சில்வா தலைமையிலான அணி இலகு வெற்றி ..!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அதற்கான பயிற்சியை ஏற்படுத்தும் முகமாக இலங்கை அணி ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று இரு அணிகளாகப் பிரிந்து பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடியது.

தனஞ்சய டீ சில்வா ஒரு அணியின் தலைவராகவும், இன்னுமொரு அணியின் தலைவராக தசுன் ஷானகவும் விளையாடினர்.

50 ஓவர்கள் கொண்ட இந்த போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா தலைமையிலான அணி 6 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, ஹசரங்க அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

பதிலுக்கு ஆடிய தசுன் சானக்க தலைமையிலான அணி 9 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவிக் கொண்டது.

முழுமையான விபரம் ???

குழு DDS 147/6 (28.1 Overs)

பேட்டிங் ?

-வானிந்து ஹசரங்க 68*(59)
-மினோத் பானுக 21 (32)
-பானுக ராஜபக்ச 14 (19)
-சாமிகா கருணாரத்ன 14 (24)

பந்துவீச்சு

-லஹிரு மதுஷங்க 4-2-9-3
-அகில தனஞ்செய 5.1-0-46-2
-மகேஷ் தீக்ஷன 6-0-29-1

அணி தசுன் 128/9 (27 ஓவ்கள்) (போட்டி 30 ஓவர்களாக குறைக்கப்பட்டது, இலக்கு 165)

பேட்டிங் ?

-அஷேன் பண்டார 40 (46)
-லஹிரு மதுஷங்க 36 (41)
-அகிலா தனஞ்செய 16*(15)

பந்துவீச்சு

-லஹிரு குமார 4-1-12-4
-புலின தரங்க 4-0-26-2
-பினுர பெர்னாண்டோ 4-1-11-1
-ரமேஷ் மெண்டிஸ் 2-0-13-1
-பிரவீன் ஜெயவிக்ரம 5-0-26-1
-வானிந்து ஹாரங்க 3-0-19-0
-சாமிக கருணாரத்ன 5-0-23-0