ஹசரங்கவிற்கு ஐபிஎல் அறிமுகம், துடுப்பாட்டத்தில் சொதப்பிய கோஹ்லி அண்ட் கோ ,கொல்கத்தாவிற்கு இலகு இலக்கு ..!
14வது ஐபிஎல் தொடரின் 31வது ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய விராட் கோலி தலைமையிலான RCBஅணி 92 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது .
ஆரம்ப வீரர்களாக படிக்கல் மற்றும் விராட் கோலி இணைந்தனர், தனு 200 வது போட்டியில் ஆடும் கோலி 5 ஓட்டங்கள் பெற்று பிரஷீத் கிருஷ்ணாவின் உடைய பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வரிசையாக ஒவ்வொரு வீரர்களும் நடையை கட்டியமை குறிப்பிடத்தக்கது ,66 ஓட்டங்களைப் பெற்றவேளை 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இன்று ஆர்சிபி அணி சார்பில் ஐபிஎல் அறிமுகம் மேற்கொண்ட இலங்கையின் வணிந்து ஹசரங்க முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார், இதேபோன்று முதல் பந்திலேயே டீ வில்லியர்ஸ் ஆட்டமிழந்தமை கவனிக்கத்தக்கது.
இறுதியில் ஆர்சிபி அணி 92 ஓட்டங்கள் பெற்று சகல விக்கட்டுகளையும் பறிகொடுத்தது, 93 எனும் இலகு இலக்கு கொல்கத்தாவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.