3 வது ஒருநாள் போட்டியில் சாம்பியன் ஸ்பின்னர் வாணிந்து ஹசரங்கா இல்லாமல் இலங்கை விளையாட வாய்ப்புள்ளது.
ஹசரங்காவுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக இன்றைய விளையாட்டுக்காக ஓய்வு வழங்கப்படலாம் என்றும் இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய ஆட்டத்திற்கு இலங்கை குறைந்தபட்சம் 2 மாற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளது, கசுன் ராஜிதாவும் காயத்துடன் வெளியேறியுள்ளார்.
இன்றைய போட்டிக்கு பரிசீலிக்கப்படும் வீரர்களில் அகில தனஞ்சய, ரமேஷ் மெண்டிஸ், இஷான் ஜெயரத்ன மற்றும் பிரவீன் ஜெயவிக்ரேம ஆகியோர் சேர்கப்படவும் வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.