ஹசரங்க தொடர்பில் எச்சரிக்கை விடுத்த முரளிதரன்..!

வனிந்து ஹசரங்கா ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக இருபதுக்கு 20 உலகக் கிரிக்கட் போட்டிக்கு முன்னதாக அணிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு முத்தையா முரளிதரன் எச்சரித்துள்ளார்.

வனிது ஹசரங்க ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியை ஆசியக் கோப்பையில் வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.

அவர் ஒரு சிறந்த டி20 பந்துவீச்சாளர். கடந்த 2-3 வருடங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில், ஆஃப் ஸ்பின்னர்களை விட லெக் ஸ்பின்னர்களுக்கு நிச்சயம் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அவருக்கு எதிராக பேட்டிங் செய்வது எதிரணிகளுக்கு கடினமாக இருக்கும். எதிரணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக எங்களிடம் ஒரு இளம் அணி உள்ளது. ஆசிய கோப்பையில் நாங்கள் நன்றாக விளையாடினோம். போட்டியில் சிறந்த அணியாக தோற்றமளித்த அவர்கள் ஆசிய கோப்பையை வெல்ல தகுதியானவர்கள்.

அவர்கள் வலிமையானவர்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக T20 உலக கிண்ண தொடரில் பிரதான சுற்றுக்கு தகுதிபெறும் ஆட்டங்களில் விளையாட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் தற்போது நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். உலகக் கோப்பையிலும் சிறப்பாக விளையாடுவோம் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.