ஹசரங்க மற்றும் சமீர தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது ஸ்ரீலங்கா கிரிக்கெட் ..!

ஹசரங்க மற்றும் சமீர தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது ஸ்ரீலங்கா கிரிக்கெட் ..!

இலங்கையிலிருந்து ஐபிஎல் போட்டிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் சமீர மற்றும் வணிந்து ஹசரங்க ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடலாம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐபிஎல்லின் இரண்டாம் கட்ட போட்டிகளில் விளையாடுவதற்காக கோலி தலைமையிலான RCB அணிக்காக இந்த இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் (No Objection Certificate) வழங்கி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்து ஐபிஎல் இரண்டாம் கட்டப் போட்டிகள், செப்டம்பர் 19ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

மொத்தம் Play Off ஆட்டங்கள் 4 அடங்கலாக 30 போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous article10 வீரர்களோடு விளையாடிய செல்சி- லிவர்பூல் உடனான பரபரப்பான ஆட்டம் சமநிலை ..!
Next articleநியூசிலாந்து, பங்களதேஷ் அணிகளுக்கு இடையிலான T20 தொடர் -செப்டம்பர் 1 ஆரம்பம் முழுமையான அட்டவணை.!