ஹர்பஜனை முடிவுகட்டிவிட்ட தல டோனி…!

ஹர்பஜனை முடிவுகட்டிவிட்ட தல டோனி…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், இம்முறை IPL ஏலத்தின் முதல் சுற்றில் ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 கோடி அடிப்படை விலை குறிக்கப்பட்டிருந்த நிலையில் ஹர்பஜனை எந்த அணியும் ஏலத்தில் பெற்றுக்கொள்ளவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராகவும் செயல்பட்டிருந்த ஹர்பஜன், கடந்த பருவ காலங்களில் சென்னை அணியில் இடம்பெற்றிருந்தார்.

டோனி தலைமையிலான சென்னை அணியால் இம்முறை கழற்றிவிடப்பட்ட நிலையில், சென்னை அணி கிரிஷ்ணப்பா கௌதம் எனும் சுழல் பந்து வீச்சாளரை 9.25 கோடி கொடுத்து பெற்றுள்ளமையும் நோக்கத்தக்கது.

40 வயதாகும் ஹர்பஜன் 2 ம் சுற்றிலும் எந்த அணியாலும் பெறப்படவில்லை என்றால் முதல்முறையாக IPL போட்டிகளில் விளையாட முடியாமல் போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

update- 8.00 PM

பின்னர் இடம்பெற்ற 2 வது சுற்று ஏலத்தில் ஹர்பஜனை 2 கோடி கொடுத்து கொல்கொத்தா அணி பெற்றுக்கொண்டது.