ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி -பேலேயின் சாதனையை தகர்த்தார்..!
கால்பந்து உலகின் நட்சத்திர வீரராக விளங்கும் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி நேற்று இடம்பெற்ற கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஒரு சாதனை படைத்தார்.
பொலிவிய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்சி 77 கோல்கள் பெற்றுக் கொண்ட பேலேயின் சாதனையைக் கடந்தார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் பேலே பெற்றுக்கொண்ட 77 கோல்களை கடந்து சாதனை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1️⃣ ⚽️ 79 ?? மெஸ்ஸி
1️⃣ ⚽️ 77 ?? பீலே
3️⃣ ⚽️ 68 ?? நெய்மர்
4️⃣ ⚽️ 62 ?? ரொனால்டோ
5️⃣ ⚽️ 63 ?? லூயிஸ் சுவராஸ்
6️⃣ ⚽️ 55 ?? ரோமரியோ
7️⃣ ⚽️ 54 ?? பாடிஸ்டுடா
தென்னமெரிக்க கண்ட நாடுகளுக்கிடையிலான கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் பிரேசில் அணியை அடுத்து அர்ஜென்டினா புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.