ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த ஹஸன் அலி, பரிதாபமாக தோற்றுப்போன பாகிஸ்தான், இரண்டாம்தர அணியிடம் இங்கிலாந்தில் மண் கவ்வியது..!

ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த ஹஸன் அலி, பரிதாபமாக தோற்றுப்போன பாகிஸ்தான், இரண்டாம்தர அணியிடம் இங்கிலாந்தில் மண் கவ்வியது..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

இங்கிலாந்தின் முன்னணி வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணத்தால் இங்கிலாந்து கிரிக்கெட் சபை 24 மணி நேரத்திற்குள் இரண்டாம்தர அணி ஒன்றை அறிவித்து இந்த தொடரில் களமிறக்கி விளையாடிக் கொண்டிருக்கிறது.

முதலாவது போட்டியில் பாகிஸ்தான் பரிதாபகரமான தோல்வியை சந்தித்தது, இன்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் பாகிஸ்தான் 52 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 247 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆரம்ப இரு விக்கட்டுக்கள் விரைவாக சரிக்கப்பட்டாலும் கூட அதற்குப் பின்னர் நல்ல இணைப்பாட்டம் கிடைத்தது, ஆனாலும் ஸ்டோக்ஸின் ஆட்டமிழப்பை தொடர்ந்து இங்கிலாந்து அணி மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்தது.

ஒரு கட்டத்தில் ஹசன் அலி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர் ,ஆனாலும் 8வது விக்கெட்டுக்கு மிகப் பெறுமதியான இணைப்பாட்டம் பெறப்பட இங்கிலாந்து போட்டியில் தாக்குப்பிடித்து 247 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிராக ஹசன் அலி அதி அற்புதமாக 5 விக்கெட்டுகளை அள்ளியமை குறிப்படத்தக்கது.

248 என்ற இலக்கு பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது, ஆயினும் பாகிஸ்தான் மீண்டும் ஒரு தடவை துடுப்பாட்டத்தில் ஏமாற்ற 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

30 ஓவரை வீசிய பர்கின்சன் எனும் சுழற்பந்து வீீச்சாளருடைய ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து ஹஸன் அலி இன்று சாகசம் புரிந்தை கவனிக்கத்தக்கது, அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 22 ஓட்டங்களை ஹஸன் அலி பெற்றுக் கொண்டார்.

ஆனாலும் கூட பாகிஸ்தான் அணியால் இந்த போட்டியில் வெற்றி கொள்ள முடியாத நிலைமை தோன்றியது, 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாம்தர அணியை களமிறக்கினாலும் தொடரை வென்று காட்டியுள்ளது.