ஹாட்ரிக் தொடர் வெற்றி பெற்று வரலாறு படைத்தது இருக்கும் வங்கதேசம் ..!

ஹாட்ரிக் தொடர் வெற்றி பெற்று வரலாறு படைத்தது இருக்கும் வங்கதேசம் ..!

பங்களாதேஸ் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட நியூஸிலாந்து அணிக்கும் பங்களதேஷ் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்டT20 தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே நான்கு போட்டிகள் நிறைவுற்ற நிலையிலேயே 3-1 என தொடரில் முன்னிலையில் இருந்த பங்களதேஷ், நேற்று 5-வது T20 போட்டியில் தோல்வியை தழுவியது.

ஆயினும் கூட தொடரை வெற்றிகரமாக 3-2 என பங்களதேஷ் முடித்துக்கொண்டது,

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது ,அதிகபட்சமாக லதாம் 50* ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி பெரிதாக சோபிக்க தவறியது.

இறுதியில் நியூசிலாந்து 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, பங்களாதேஷ் அணி 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் இறுதியாக மூன்று ஆண்டுகளில் சொந்த மண்ணில் இடம் பெற்ற T20 தொடர்கள் எதிலும் தோல்வியை தழுவ வில்லை என்பதும் சுட்டிக்காட்டக்கூடிய விஷயம்.

3 ஆண்டுகளிலேயே விளையாடிய மூன்று தொடர்களில் 12 போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டும் தான் பங்களாதேஸ் தோல்வியை தழுவியிருக்கிறது என்பது முக்கியமானது.

ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துடனான தொடரையும் பங்களாதேஷ் வெற்றிகொண்டுள்ளது.

2-0 v ஜிம்பாப்வே ✅
4-1 v ஆஸ்திரேலியா
3-2 v நியூசிலாந்து ✅