ஹாட்ரிக் தோல்வியோடு குவாலிபயர் ஆட்டத்தில் விளையாடுவதை வீணடித்திருக்கும் சென்னை- மும்பையுடன் மல்லுக்கட்டும் அபாய நிலையில்..!

ஹாட்ரிக் தோல்வியோடு குவாலிபயர் ஆட்டத்தில் விளையாடுவதை வீணடித்திருக்கும் சென்னை- மும்பையுடன் மல்லுக்கட்டும் அபாய நிலையில்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையிலான 53வது IPL போட்டி சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது, இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது.

இந்த தோல்வி மூலமாக சென்னை அணி 14வது ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் தோல்வியை தழுவி உள்ளமை குறிப்பிடத்தக்கது, ஏற்கனவே ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் தோல்வியை தழுவி இருந்த சென்னை அணி, அதன் பின்னர் ஆர்சிபி அணியுடன் தோல்வியை தழுவியது, இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்தத் தோல்வி மூலமாக சென்னை அடுத்து வரவுள்ள Play off சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டாலும், குவாலிபயர் ஆட்டத்தில் ஆடுவதற்கான வாய்ப்பு இப்போது சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது.

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் டெல்லி அணியும், இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்சும், மூன்றாவது இடத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் இருக்கின்றன,

இந்த நிலையில் சென்னை தொடர்ந்து தோல்விகளைத் தழுவிக்கொண்டுள்ள காரணத்தால் பெங்களூர் அணி நாளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடனான போட்டியில் மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தில் பாரிய வெற்றிபெறுமாயின் புள்ளி பட்டியலில் 2 வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இதன் காரணத்தால் குவாலிபயர் போட்டியில் விளையாட இருந்த அருமையான வாய்ப்பை சென்னை தவறவிட்டு, எலிமினேட்டர் போட்டியில் விளையாடும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படும் என்பதும் இங்கே சுட்டிக்காட்டதக்கது.

சில வேளைகளில் எலிமினேட்டர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பையை சந்திக்கக் கூடிய அபாயகரமான ஒரு நிலைமை உருவாகும் எனவும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

இன்றைய போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது, சென்னை அணி சார்பில் பிளசிஸ் 76 ஓட்டங்கள் பெற்றார், தோனி 15 பந்துகளில் 12 ஓட்டங்கள் , ஜடேஜா 15 ஓட்டங்கள் பெற்றனர்.

பதிலுக்கு ஆடிய பஞ்சாப் கிங்சுக்கு லோகேஷ் ராகுல் 98 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார், இறுதியில் 13 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்று போட்டியில் பஞ்சாபி கிங்ஸ் 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

அதிகமாக பனாஜிபி கிங்ஸ் அணிக்கு Play off வாய்ப்பு அரிதாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது, ஆட்டநாயகன் விருது லோகேஷ் ராகுல் வசமானது.