ஹாட்லி கல்லூரியின் ஆதிக்கமும் நம்மவர்களின் வியக்க வைக்கும் திறமையும் : 70 களில் நடைபெற்ற பருத்தித்துறை சீனா கால்பந்து போட்டி

ஹாட்லி கல்லூரியின் ஆதிக்கமும் நம்மவர்களின் வியக்க வைக்கும் திறமையும் : 70 களில் நடைபெற்ற பருத்தித்துறை சீனா கால்பந்து போட்டி

70 களில் சீனா நாட்டு உதைபந்தாட்ட கோஸ்டிக்கும் பருத்தித்துறை உதைபந்தாட்ட கோஸ்டிக்கும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் ஒரு சினேகபூர்பவமான போட்டி நடைபெற்றது

நன்கு பயிற்றுவிக்கப்பட்ட சீனா நாட்டு விளையாட்டு வீரர்களுடன் பருத்தித்துறை கோஸ்டி ஈடு கொடுத்து விளையாடியது உதைபந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை கொடுத்தது

அந்நேரம் ஹாட்லி கல்லூரி அதிபராக இருந்த இராஜதுரை அவர்கள் இரு விளையாட்டு கோஸ்டியினரையும் அறிமுகபடுத்தி போட்டியை ஆரம்பித்து வைத்தார்

அதிபர் இராஜதுரை அவர்கள் முன்னாள் இலங்கை தேசிய உதைபந்தாட்ட கோஸ்டியில் விளையாடியவர் என்று கூறப்படுகிறது

சீன நாட்டு உதைபந்தாட்ட வீரர்களின் இது வரை விளையாட்டு ரசிகர்கள் அறிந்திராத நுணுக்கமான விளையாட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அவர்களின் அந்த திறமையையும் அங்கீகரித்து அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகபடுத்தி ஆர்ப்பரித்து கொண்டார்கள்.

ஆட்டத்தின் இடைவேளைக்கு முன்னரே சீனா ஆறு கோல்களை போட்டு முன்னிலையில் நின்றது

இடைவேளை முடிந்த கையோடு ஹாட்லிகல்லூரி ஆசிரியர் ஜோதிரவி அவர்கள் சீனாவுக்கு எதிராக முதல் கோலை போட்டு ரசிகர்களை உற்சாகபடுத்தினார்

மீண்டும் 15 நிமிடத்துக்கு பின்னர் ஜோதிரவி மாஸ்ரரே இன்னுமொரு ஒரு கோலையும் சீனாவுக்கு எதிராக போட்டார்

கடைசி நேரத்தில் இன்னொரு கோலையும் போட்டு பருத்தித்துறை சீனாவுக்கு எதிராக 6-3 என்ற நிலையை எடுத்திருந்தது

இடைவேளிக்கு பின்னர் சீனா ஒரு கோலையும் போட விடாமால் தற்காத்து விளையாடியது பருத்தித்துறைக்கு கிடைத்த மிகுந்த பாராட்டாகும்

இந்த பருத்தித்துறை கோஸ்டியில் விளையாடியவர்கள் இரு ஹாட்லி கல்லூரிஆசிரியர்கள் ஜோதி ரவி ,ரட்ணசிங்கம் முன்னாள் ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் அப்பொழுது மாணவனாக இருந்த அன்பழகன் பொலிஸ் இன்ஸ்பகட்ர் சுந்தரலிங்கம்

மற்றும் சிலர்

அந்த நேரத்தில் இந்த உதைபந்தாட்ட போட்டிக்கு போட்டிருந்த விளம்பரத்தை பெட்டி செய்தியாக பார்க்கலாம்

 

செய்தி : Sinnakuddy Mithu என்பவரின் முகபுத்தக பதிவில் இருந்து…