ஹார்டிக் பாண்டியாவிற்கு போட்டியாக கொல்கத்தாவின் புதிய கண்டுபிடிப்பு – அறிமுக வீரரின் அசத்தல்..!

பெங்களூர் அணிக்கு எதிரான IPL ஆட்டத்தில் ரசிகர்களின் கவனத்தை  ஈர்த்தவர் கொல்கத்தாவின் அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயர்.

நேற்று தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியில் அவர் விளையாடினார். ஆனால், கண்களிலும் துளி பயம் இல்லை. அவரது ஷார்ட்ஸ் பதட்டமின்றி பறந்தன. ஏதோ, 10 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு தேர்ந்த கிரிக்கெட்டரைப் போல பந்துகளை க்ளீயர் செய்தார் வெங்கடேஷ். இதன் மூலம் கொல்கத்தா அணியின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவராக வெங்கடேஷ் உருவடுத்துள்ளார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த வெங்கடேஷ் 27 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார். இதில், 7 பவுண்டரிகளும், 1 மெகா சிக்ஸரும் அடங்கும். அவர் சிக்ஸ் அடித்தது கைல் ஜேமிசன் ஓவரில். அதுவும், 90 மீட்டர் சிக்ஸ் அது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படையப்பா படத்தில் ஒரு வசனம் வரும். “என் வழி தனி வழி என்று.. என்னோட வழியும் அப்படித்தான். நான் எப்போதும் தனி வழியில் செல்பவன். இது ஒரு அற்புதமான பயணம், இன்னும் பல கற்றல் மற்றும் நல்ல அனுபவங்களுடன் மென்மேலும் வளர விரும்புகிறேன்” என தைரிவித்த ஐயர் ஒரு கணக்கியல் துறை வல்லுனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் ஹார்டிக் பாண்டியாவின் இடத்தை குறிவைத்து நகரக்கூடிய ஆற்றல் இவரிடம் அதிகம் தெரிகிறது.

Previous articleஆரம்ப வீரர்களின் அதிரடியில் ஆர்சிபி அணியை பந்தாடியது கொல்கத்தா ,ஏமற்றினார் ஹசரங்க..!
Next articleதல தோனியின் மாஸ்டர் பிளானில் சிக்கிய கிஷான்- வீடியோவை பாருங்கள் அசந்து போவீர்கள்..!