ஹார்திக் பாண்டியாவை விட்டு விடுங்கள், இந்த இரண்டு வீரர்களையும் ஆல்ரவுண்டர்களாக வளர்த்தெடுங்கள் கவாஸ்கர் ஆலோசனை..!

ஹார்திக் பாண்டியாவை விட்டு விடுங்கள், இந்த இரண்டு வீரர்களையும் ஆல்ரவுண்டர்களாக வளர்த்தெடுங்கள் கவாஸ்கர் ஆலோசனை..!

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஹார்திக் பாண்டியா அண்மைக்காலமாக அவருடைய துடுப்பாட்டம், பந்துவீச்சு பெறுதிகள் மூலமாக அதிக விமர்சனத்தை சந்தித்துவருகின்றார்.

எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக்கிண்ண T20 போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில், இலங்கையுடனான போட்டிகளிலும் பாண்டியாவின் துடுப்பாட்ட பங்களிப்பு பேசும்படியாக அமையவில்லை .

இதனால் இந்திய தேர்வாளர்கள் மட்டுமல்லாது, ரசிகர்களும் பெருத்த கவலை கொண்டுள்ளனர் .

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.

நாங்கள் எல்லோரும் ஒரு வீரரை மட்டுமே உற்று நோக்கி கொண்டிருக்கிறோம், ஒரு வீரருக்கு மட்டுமே தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறோம், அதனால்தான் அவர் Out of form ல் இருக்கிறார் என்று கவலைப்படுகிறோம்.

கடந்த 2, 3 ஆண்டுகளாக என்ன நடந்தது ?நாங்கள் அவருக்கு மாற்றாக இன்னுமொரு வீரரை தயார் படுத்த வில்லை,  தீபக் சஹர் இலங்கையுடனான தொடரில் விளையாடிய துடுப்பாட்டத்தை பாருங்கள் ,அவரால் மிகச் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக வளர முடியும். நல்ல துடுப்பாட்ட வல்லமை அவரிடம் இருக்கிறது, புவனேஸ்வர் குமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதிரியான இன்னிங்ஸ் ஒன்றை இலங்கையில் விளையாடினார் ,அவர் டெஸ்ட் போட்டிகளில் 4 அரைசதங்கள் அடித்திருக்கிறார், உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறந்த சராசரி இருக்கிறது.

புவனேஷ்வர் குமார், தீபக் சஹர் ஆகியோர் மிகச் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களாக வரவல்லவர்கள்.

ஹார்திக் பாண்டியா சரிப்பட்டு வரவில்லை என்றால், தீபக் சஹர் மற்றும் புவனேஸ்வர் குமாருக்கு  வாய்ப்புக்கள் கொடுப்பதே இந்தியாவின் எதிர்காலத்திற்கு சிறந்தது என சுனில் கவாஸ்கர் தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.