ஹென்றியின் அசுர வேகம்- 95 ரன்னில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா..!
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 95 ரன்னில் சுருண்டது.
நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து, டிம் சவுத்தி, மேட் ஹென்ரி, கைல் ஜாமிசன், நீல் வாக்னர் ஆகிய நான்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களுடன் பீல்டிங் செய்ய களம் இறங்கியது.
ஹென்ரி வரிசையாக எல்லோரையும் முடிச்சுக்கட்டி வெளியேற்ற 49.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென்ஆப்பிரிகா 95 ரன்னில் சுருண்டது. நான்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்னைத் தொட்டனர்.
மேட் ஹென்ரி அபாரமாக பந்து வீசி 15 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார். டிம் சவுத்தி, கைல் ஜாமிசன், நீல் வாக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.