ஹெஸ்ஸேல்வூட்டின் விலகலுக்கு காரணம் புஜாரா- மீம்ஸ் .

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹெஸ்ஸேல்வூட் திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சொந்த காரணங்களுக்காக அவர் விலகுவதாக நேற்று அறிவித்தார்.

இதனிடையே மீம்ஸ் கிரியேட்ட்ர்கள் ஹெஸ்ஸேல்வூட்டின் விலகலுக்கு காரணம் புஜாரா என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் வீரர் புஜாரா தனது விக்கெட்டை பறிகொடுக்காது ஒட்டுமொத்த அவுஸ்திரேலிய பந்துவீச்சுப் படைக்கும் சோதனை கொடுத்தார்.

இப்போது புஜாராவும் சென்னை அணியில் இடம்பிடித்துள்ள நிலையில் அந்த பயத்திலேயே ஹெஸ்ஸேல்வூட் விலகுவதாக மீம்ஸ் உலாவரத்தொடங்கியுள்ளது.