? ஆர்ஜெண்டினா கோல்காப்பாளர் எமி மார்டினெஸின் விசித்திரக் கதை”
2010 ம் ஆண்டில் அர்செனல் கழகத்தில் சேர்ந்தார், ஆயினும் 10 ஆண்டுகள் வாய்ப்பின்றி பெஞ்சில் கழித்தார்.
அர்செனலில் கோல்கீப்பிங் செய்ய அவருக்கு ஒருபோதும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
2020 ஆம் ஆண்டில், இறுதியாக அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது, அர்செனலுக்கான FA கோப்பை வென்றதில் அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.
அவர் முதல் தேர்வு கோல்கீப்பராக மாற விரும்பினார், எனவே அவர் அர்செனலை விட்டு வெளியேறி, ஆஸ்டன் வில்லாவில் சேர்ந்தார், அதன்பின்னர் அங்கு அவர் பிரீமியர் லீக்கின் சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்தினார்.
அவருக்கு அர்ஜென்டினாவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட போது லியோனல் மெஸ்ஸிக்காக அர்ஜென்டினா அணி ஒரு கோப்பையை வெல்ல தனது முழுப் பங்களிப்பையும் நல்கினார்.
கொலம்பியாவுக்கு எதிராக, கோபா அமெரிக்காவின் அரையிறுதியில் 3 பெனால்டிகளை அவர் காப்பாற்றினார், அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அதுவே உதவியது.
➡️ இன்று, எமி மார்டினெஸ் தனது 4 Clean Sheet (கோலடிக்க சந்தர்ப்பம் எதுவும் வழங்காமையால்) கோபா அமெரிக்கா கோல்டன் க்ளோவ் (Golden Glove) விருதை வென்ற முதல் அர்ஜென்டினா கோல்கீப்பர் ஆக தன்னை மாற்றியிருக்கிறார்.
காத்திருப்பவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் வரும் என்பதற்கு இவர் நல்ல உதாரணமாக கருதலாம்.