ஃபேப் டு பிளேசிஸ் தலைவர் -தோனி ஆலோசகர், சூப்பர் கிங்ஸின் அதிரடி தீர்மானம்…!

ஃபேப் டு பிளேசிஸ் தலைவர் -தோனி ஆலோசகர், சூப்பர் கிங்ஸின் அதிரடி தீர்மானம்…!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்திருக்கும் 6 அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் தென்னாப்பிரிக்காவிலும் கிரிக்கெட் அணிகளை வாங்கியிருக்கிறார்கள் என்பது சுவாரசியமானது.

மும்பை இந்தியன்ஸ் கொள்முதல் செய்துள்ள அணிக்கு MI Cape Townஎன்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களான இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்து இருக்கும் அணிக்கு
Josburg சூப்பர் கிங்ஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன .

இந்த நிலையில் இந்த தொடரில் இந்திய சிமென்ட் கொள்முதல் செய்து வைக்கும் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஃபேப் டு பிளேசிஸ் தலைவராக விளையாட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன .

மஹேந்திர சிங் தோனி இந்த அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் செய்திகள் வெளியாகின, இந்த இருவர் கூட்டணியில் சூப்பர் கிங்ஸ் அணி தென் ஆபிரிக்க கிரிக்கெட்டிலும் மகுடங்கள் சூடும் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்.