இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டிக்கு தலைமை தாங்கியதுடன் மூன்று கேட்சுகளை கைப்பற்றிய சரித் அசங்கவிற்கு விசேட பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பந்துவீச்சு பயிற்சியாளர் உபுல் சந்தன வெள்ளி நாணயம் மற்றும் ஆரஞ்சு தொப்பி ஒன்றை அசலங்கவுக்கு வழங்கினார்.
வீரர்களின் திறமையை பாராட்டும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயல்திட்டத்தின் படியே அசலங்க பாராட்டைப்பெற்றார்.