அசுதோஷ் ஷர்மாவின் போராட்ட இன்னிங்ஸ் வீணானது,பஞ்சாப் போராடித் தோற்றது..!

அசுதோஷ் ஷர்மாவின் போராட்ட இன்னிங்ஸ் வீணானது,பஞ்சாப் போராடித் தோற்றது..!

சூர்யகுமார் யாதவின் அரை சதம் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜெரால்ட் கோட்ஸியின் திறமையால் மும்பை இந்தியன்ஸ் அணி 2024 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 33 வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. (18)

முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் அணியின் அழைப்பின் பேரில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை பேட்ஸ்மேன்கள், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியினர் 19.1 ஓவர்கள் முடிவில் 183 மாத்திரமே எடுக்க முடிந்தது.

பஞ்சாப் அணி 2.1 ஓவரில் 14 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தோல்வியடைந்தாலும், ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல கடுமையாக உழைத்தனர்.

ஷஷாங்க் 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அசுதோஷ் 28 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் குவித்தார்.

கடைசி 24 பந்துகளில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 18-வது ஓவரில் 8-வது விக்கெட்டாக அசுதோஷ் ஆட்டமிழந்தபோது, ​​வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை பறிபோனது.

பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 21 க்கு 3 விக்கெட்டுக்களையும், ஜெரால்ட் கோட்சே 32 க்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

முதலில் பேட் செய்த மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் 53 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். அது, 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன்.

ரோகித் சர்மா 36 ரன்களும், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 34 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல் 31 க்கு 3 விக்கெட்டுக்களையும், சாம் கரன் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.