அஞ்சலோ மெத்தியூஸின் மகத்தான மனித நேயப் பணி- குவிந்துவரும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..!

அஞ்சலோ மெத்தியூஸின் மகத்தான மனித நேயப் பணி- குவிந்துவரும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் ஆரம்பித்த அமோகமான மனிதநேயப் பணிக்கு ஏராளமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

இலங்கையின் கொழும்பில் உள்ள லீஏடி ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையில் இருதய சிறப்பு சிகிச்சை பிரிவுக்கான புதிய மாடிக் கட்டடங்களும், அதற்கான உபகரண வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அஞ்சலோ மெத்தியூஸ் ஏற்படுத்திய ஒரு நிதி  நலத்திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.

மத்தியூஸ் ஆரம்பித்த இந்த திட்டத்திற்கு அதிகமானவர்கள் முன்வந்து நிதி ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர், கிட்டத்தட்ட 30 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி இதுவரைக்கும் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும், 11 வது மாடி கட்டடம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதாகவும், 12 வது மாடி கட்டட நிர்மாணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் மத்தியூஸ் தகவலைத் தருகிறார்.

“லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் லிட்டில் ஹார்ட்ஸ் கார்டியாக் மற்றும் கிரிட்டிகல் கேர் வளாகத்திற்கு தாராளமாக அளித்த பங்களிப்பால் 3 மில்லியன் ரூபாய்க்கு மேல் நாங்கள் வசூலித்துள்ளோம் என்பதை நான் பெருமைப்படுகிறேன்”

#11 வது மாடி கட்டுமானம் இப்போது முடிந்துவிட்டது, இப்போது 12 வது மாடித் திட்டங்களில் தொடங்க முடிகிறது. இது படிப்படியாக விரிவடைவதைக் கண்டு மனம் மகிழ்கிறது”


“பெறப்பட்ட ஒவ்வொரு நன்கொடையும் இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்கு செலுத்துகிறது. இந்த நிதி தேசிய சுகாதார நிதிக்கு அனுப்பப்பட்டு பின்னர் LRH லிட்டில் ஹார்ட்ஸ் திட்ட நோக்கங்களுக்காக அனுப்பப்படுகிறது. வெளிப்படைத்தன்மையை பராமரிப்பதற்காக, மேலும் தகவல் தேவைப்படும் எவருக்கும் ஒரு ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது”

திரு. தர்மவர்தனே – NHDF அமைச்சகம் -0112 698 169

“தயவுசெய்து எங்கள் நோக்கத்தை தொடர்ந்து ஆதரிக்கவும், ஒன்றாக நமது குழந்தைகளின் முக்கியமான சுகாதாரப் பாதுகாப்புத் தேவைகளுக்காக ஒரு சிறந்த வசதியை உருவாக்குவோம்.

நாம் அனைவரும் சேர்ந்து இந்த சவாலை வெல்லலாம்” என மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

ஆக மொத்தத்தில் அஞ்சலோ மெத்தியூஸின் இந்து இருதய சிகிச்சை பிரிவுக்கான மனிதநேய பணி குறித்து நாமும் வாழ்த்துவோம், பங்களிப்போம்.

நீங்களும் நிதிப்பங்களிப்பு நல்க விபரம் ???