அடிக்கப்போன அஸ்வின்- மடக்கிப் பிடித்த கார்த்திக், டெல்லி போட்டியின் பரபரப்பு சம்பவம்- விளக்கம் தருகிறார் தினேஷ் கார்த்திக்..!

அடிக்க போன அஸ்வின்- மடக்கிப் பிடித்த கார்த்திக், டெல்லி போட்டியின் பரபரப்பு சம்பவம்- விளக்கம் தருகிறார் தினேஷ் கார்த்திக்..!

14வது ஐபிஎல் தொடரின் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான போட்டி பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த போட்டியில் குறைந்த அளவு ஓட்டங்கள் பெறப்பட்ட போட்டியாக இருந்தாலும், இரு அணிகளும் மைதானத்தில் மூர்க்கத்தனமாக முட்டி மோதின.

சவுத்தி மற்றும் ஒயின் மோர்கன் ஆகியோருடன் அஷ்வின் தகராறில் ஈடுபட்டதுடன் அவர்களை நோக்கி வார்த்தை சண்டை புரிந்துகொண்டு அவர்களை நோக்கி வசைபாடிய நிகழ்வும் மைதானத்தில் மிகப்பெரிய களேபரத்தை உருவாக்கியது.

https://twitter.com/Pran33Th__18/status/1442820770195980296?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1442820770195980296%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-30598245241246078515.ampproject.net%2F2109102127000%2Fframe.html

 

போட்டியின் இடைநடுவே தமிழ்நாட்டினுடைய இன்னுமொரு வீரரான தினேஷ் கார்த்திக புகுந்து இந்த வீரர்களை விலக்கிவிட்டு, சமாதான தூதுவர் பணியை ஆற்றி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

பின்னர் அஸ்வின் பந்துவீச்சில் மோர்கன் ஆட்டமிழந்தார் என்பதோடு மைதானத்தில் மீண்டும் அஸ்வின் தனது கோபத்தைக் காண்பித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவிக்கின்றபோது,மோர்கன் கோபமடைந்து இருந்ததை அவதானித்ததால் அஸ்வினை கட்டுப்படுத்த இந்த முயற்சிகளில் ஈடுபட்ட தாகவும் போட்டிக்கு பின்னர் நிலைமை சுமுகமாக கொண்டுவரப்பட்டதாகவும் ஒரு பீஸ் மேக்கராக (சமாதான தூதுவராக) செயற்பட்டதில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் தினேஷ் கார்த்திக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் தலைவர் பான்ட், கிரிக்கெட்டை பொறுத்த வரையில் கிரிக்கெட்டில் இதுவும் ஒரு பகுதி என்று இந்த விடயத்தை கையாாண்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது .

போட்டியில் கொல்கத்தா 3 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.