அடுத்தடுத்து இரு போட்டிகளில் சிக்கலில் மாட்டிக் கொண்ட ராஜஸ்தான் அணி தலைவர் சாம்சன் ..!
14வது ஐபிஎல் தொடரின் டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான இன்றைய போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்பார்க்கப்பட்ட அளவில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறினாலும், அணித்தலைவர் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வியக்கத்தக்க வகையில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது, அந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்க தவறியமைக்காக 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோன்று இன்றைய போட்டியிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தாமதித்த காரணத்தால் இவருக்கு இன்று 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் மொத்தம் 36 லட்சம் அபராதம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 37 ஓட்டங்களால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை தோற்கடித்தது.