அதிர்ச்சியில் உறைந்துபோன பார்சிலோனா ரசிகர்கள்- மெஸ்ஸி விலகல்…!

அதிர்ச்சியில் உறைந்துபோன பார்சிலோனா ரசிகர்கள்- மெஸ்ஸி விலகல்…!

 கால்பந்து ரசிகர்களை பொறுத்தவரையில் மிகப் பெரிய விருப்பத்துக்குரிய வீரராக திகழ்ந்து வருகின்றார்.

 கழக மட்டப் போட்டிகளில் பிரபல பாரசிலோனா கழகத்துக்காக விளையாடி வரும் மெஸ்ஸி தொடர்பாக பல விதமான கதைகள் ,கருத்துகள் அண்மைக்காலமாக பகிரப்பட்டன.

பார்சிலோனா கழகத்துடனான ஒப்பந்தத்தை மெஸ்ஸி முடித்து விடுவார் என்று அதிகமானவர்கள் கருத்துப் பகிர்ந்தாலும் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறதா அல்லது புதுப்பிக்கப்படுகிறதா என ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

ஆயினும் சற்றுமுன்னர் பார்சிலோனா கால்பந்துக் கழகம், தன்னுடைய ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் விருப்பமில்லை என மெஸ்ஸி தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் மெஸ்ஸக்கும் பார்சிலோனா கழகத்துக்கும் இடையிலான உடன்படிக்கை முடிவுக்கு வருவதாக ரசிகர்கள் கவலையுடன் கருத்துக்களை பகிர்ந்து வரிகின்றனர்.

இந்த அதிர்ச்சி தகவல் பார்சிலோனா கால்பந்து ரசிகர்களுக்கு மிகப் பெரும் கவலைக்குரிய விஷயமாகும், அடுத்து வரப் போகும் நாட்களில் எந்த கழகத்தோடு மெஸ்ஸி இணையப் போகிறார் என்ற செய்திக்காக காத்திருக்க நேர்ந்துள்ளது. இதன் மூலமாக 21 ஆண்டுகளாக நீடித்த பார்சிலோனா மற்றும் மெஸ்ஸி உறவு இப்போது 21 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமையே ரசிகர்களால் கவலையோடு பார்க்கப்படுகிறது.

13 வயதில் பார்சிலோனா கழகத்தில் இணைந்து, 17 சீசன்களாக பார்சிலோனாவின் சிரேஸ்ட அணிக்காக விளையாடி வரும் லியோனல் மெஸ்ஸி நான்கு Champion Leaque , 10 LA liga  கிண்ணங்களையும் வென்று கொடுத்தவர் என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது

“FC பார்சிலோனா மற்றும் லியோனல் மெஸ்ஸி ஒரு உடன்பாட்டை எட்டினாலும், இரு தரப்பினரும் இன்று ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற தெளிவான எண்ணம் இருந்தபோதிலும், நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள்  “financial and structural obstacles (Spanish Liga regulations). [ஸ்பானிஷ் லா லிகா விதிமுறைகள்] காரணமாக இது நடக்காது” என்று கிளப் தெரிவித்துள்ளது.

“FC பார்சிலோனா முழு மனதுடன் கிளப்பின் வளர்ச்சிக்கான பங்களிப்பிற்காக Messi க்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், மேலும் அவரது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.” என குறிப்பட்டுள்ளது.