பாபர் ஆசமின் முதல் இன்னிங்ஸ் சதம், இரண்டாவது இன்னிங்ஸ் அரைசதத்தையும் தாண்டி, இலங்கை உடனான முதல் டெஸ்ட் போட்டியில் 344 ரன் இலக்கை வெற்றிக்கரமாக விரட்டி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 160 ரன் குவித்து, ஆட்டநாயகன் விருது வாங்கியிருக்கிறார், 23 வயதை நெருங்கி இருக்கும் அப்துல்லா சபீக்!
இந்த ஆண்டு ஆஸ்திரேலியா உடன் உள்நாட்டில் தட்டையான ஆடுகளங்களில் நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே இவரது ஸ்ட்ரைக்ரேட் மொத்தமாக 42தான். குறிப்பாக கடைசி இரண்டு டெஸ்ட் நான்கு இன்னிங்ஸ்களில் இவரது ஸ்ட்ரைக்ரேட் 36, 31, 35, 33 தான்.
இந்தப் போட்டியிலும் 160 ரன்களுக்கு 408 பந்துகளைச் சந்தித்து 39 ஸ்ட்ரைக் ரேட்டையே கொண்டிருக்கிறார். ஏழு பவுண்டரி ஒரு சிக்ஸர் என 34 ரன்களை மட்டுமே பவுண்டரி சிக்ஸர்களால் கொண்டு வந்திருக்கிறார்.
இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டுவது அவர் மெதுவாக ஆடுகிறார் என்பதை அல்ல, எவ்வளவு கவனமாக ஆடுகிறார், எவ்வளவு சிறப்பான பேட்டிங் தற்காப்பு யுக்தியை வைத்திருக்கிறார், ஒன்றிரண்டு ரன்களாக சேகரித்து எந்தளவு ஸ்ட்ரைக் ரொடேட் செய்கிறார் என்பதைத்தான்!
உள்நாட்டில் தட்டையான ஆடுகளத்திலும் மெதுவாகத்தானே ஆடியிருக்கிறார், இது எப்படி கவனத்தில் மட்டுமே சேருமென்றால், 2020 உள்நாட்டு டி20 தொடரில் சென்ட்ரல் பஞ்சாப் அணிக்காக அறிமுகமான ஆட்டத்திலேயே சதம் அடித்திருக்கிறார். அறிமுக டி20 போட்டியில் சதம் அடித்த ஒரே பாகிஸ்தான் வீரர் அப்துல்லா சபீக்தான்!
வேகப்பந்து வீச்சிற்கு சராசரியாக ஒத்துழைக்க கூடிய ஆடுகளங்களில் இவர் விளையாடும் பொழுது, இவரது பேட்டிங் தற்காப்பு யுக்தி எந்தளவு சிறந்தது என்பது முழுமையாகத் தெரியவரும்!
வொர்த் டெஸ்ட் பேட்டிங் இன்னிங்ஸ்!
#Richards