அப்பாவின் வழியைப் பின்பற்றி வேகப்பந்து வீச்சில் ஜொலிக்கும் இலங்கையின் இளம் நட்சத்திரம் – ஹிமேஸ்..!
இலங்கையில் இடம்பெற்று வரும் நான்கு அணிகளுக்கிடையிலான எஸ்எல்சி டி20 தொடரின் இறுதிப் போட்டிக்கு சந்திமால் தலைமையிலான எஸ் எல் சி Reds அணியும் , தசுன் சானக்க தலைமையிலான எஸ்எல்சி Greys அணியும் தேர்வாகியுள்ளன.
இதுவரைக்கும் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்ட சம்பக ராாமநாயக்கவினுடைய மகன் ஹிமேஸ ராமநாயக்க இந்த தொடர் மூலமாக அதிகம் பேசப்படும் ஒருவராக மாறியிருக்கிறார்.
ரோயல் கல்லூரியின் முன்னாள் வீரரான ராமநாயக்க, இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
இதுவரைக்கும் இடம்பெற்றிருக்கும் 4 போட்டிகளில் ஹிமேஸ் ராமநாயக்க மொத்தம் 7 விக்கெட்டுகளை 8.18 எனும் ஓட்டப்பெறுதியில் கைப்பற்றி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தந்தையின் வழியை பின்பற்றி அணியின் வேகப் பந்துவீச்சில் ஜொலிப்பதாக ரசிகர்கள் புகழாரம் சூட்டுகின்றனர், இது மாத்திரமல்லாமல் எஸ் எல் சி டி ட்வென்டி தொடர் ராமநாயக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதாகவும் ரசிகர்கள் பெருமைப் படுகின்றனர்.
வாழ்த்துக்கள் ஹிமேஸ் ராமநாயக்க ???