அமெரிக்காவிடம் தொலைத்த அற்புத முத்து இந்த சௌரப் நேட்ராவல்கர்.

அமெரிக்காவிடம் தொலைத்த அற்புத முத்து இந்த சௌரப் நேட்ராவல்கர்.

மும்பையில் பிறந்த இந்திய வம்சாவளியாகிய இவர் சிறு வயதில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தினால் பிசிசிஐ நடத்திய talent scout இல் கலந்து கொள்கிறார். அதில் சிக்சர் கிங் யுவராஜ் சிங்கையே தன் சிறந்த பந்துவீச்சால் அவுட் செய்கிறார். யுவராஜ் சிங்கையே விக்கெட் எடுத்ததால் இவரது பவுலிங் திறமை பிசிசிஐ கண்களுக்கு தெரிகிறது. U19 போட்டிகளில் KL ராகுல், உணத்கட், மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் உடன் விளையாடுகிறார்.

பின்பு 2010 U-19 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அதற்காக அவரது மேற்படிப்பை தியாகம் செய்ய வேண்டிய சூழல் வருகிறது. U-19 உலகக்கோப்பையில் சிறப்பாக பந்து வீசி , இந்தியாவிற்கு அதிக விக்கெட் எடுத்த பவுலராக மாறுகிறார்.

பின் 2013 இல் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி விளையாடுகிறார். ஆனால் ஏற்கனவே ஜாஹிர் கான், அகர்கர் பவுலிங் லைன் அப் இல் இருப்பதால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இனி கிரிக்கெட் கை கொடுக்காது என்று எண்ணி தன் மேற்படிப்புக்காக அமெரிக்காவிற்கு செல்கிறார். அங்கேயே படித்து ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக அமருகிரார். பகலில் Oracle நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் வேலை. வேலை முடிந்தவுடன் பார்ட் டைம் ஆக கிரிக்கெட் பயிற்சி.

கடின உழைப்புக்கு பின் USA அணியில் இடம் கிடைக்கிறது. தான் எந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டாரோ அந்த அணியின் முக்கிய ஜாம்பவான்களை நேற்று நடந்த போட்டியில் தட்டி தூக்கினார்.

இந்திய அணி இவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால், இந்நேரம் இவர் ஒரு அஜித் அகர்கர் ஆகவோ, ஜாஹிர் கான் ஆகவோ இந்திய அணியில் இருந்திருப்பார்.
இந்திய அணி தொலைத்த முத்து இன்று அமெரிக்காவில் ஜொலிக்கிறது…

Proud of you #SaurabhNetravalkar as an Indian.

#T20 #USAvIND #T20WorldCup2024 #newyork #viratkohli #aaronjones #ipl #mixturememes #INDvUSA #florida #bcci #RanjiTrophy #iccworldcup2024