அமேசான் நிறுவனத்தில் டெலிவரி டிரைவர் முதல் உலக்கிண்ண ஆட்டநாயகன் வரை- ஸ்கொட்லாந்து வீரர்..!
உலக கிண்ணத்தின் முதல்சுற்று ஆட்டத்தில் பங்களாதேஷ் – ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஸ்காட்லாந்து வீரர் கிறிஸ் கிரேவ்ஸ் அமேசான் நிறுவனத்தில் பார்சல் டெலிவரி டிரைவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் கிரேவ்ஸ் 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்து அசத்தினார்.இதனால் 140 ரன்களை ஸ்காட்லாந்து எட்டியது. பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
அமேசான் டெலிவரி டிரைவரிலிருந்து இன்று ஆட்ட நாயகன் விருதுவரை வென்று சாதித்துள்ளமை பாராட்டப்படவேண்டியதே.
இப்போது ஸ்காட்லாந்து அணி நேற்று இடம்பெற்ற பப்புவா நியூ கினியா அணியுடனான ஆட்டத்திலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் காணப்படுகின்றது்.