அமோகமாக ஆரம்பித்தது ஆர் சி பி -டி வில்லியர்ஸ் அதிரடி சதம், ஆர்வத்தோடு காத்திருக்கும் ரசிகர்கள்..!
ஐபிஎல் 2020 இன் இரண்டாவது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு பெருவாரியான எதிர்பார்ப்பு இருக்கிறது, இம்முறை கிண்ணத்தை எந்த அணி கைப்பற்ற போகிறது என காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தங்களுக்கிடையில் ஒரு பயிற்சிப் போட்டிகளில் விளையாடியிருக்கிறது.
படிக்கல் மற்றும் ஹர்ஷா பட்டேல் ஆகியோர்களை தலைவர்களாகக் கொண்டு இரு அணிகளாகப் பிரிந்து தங்களுக்கிடையில் விளையாடிய பயிற்சி போட்டி ஒன்றில் டி வில்லியர்ஸ் அதிரடி சதம் விளாசி இருக்கிறார் 46 பந்துகளில் 104 ஓட்டங்கள் டி வில்லியர்ஸ் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
இதன் காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டிவில்லியர்ஸ் விளையாடிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து எண் 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அதேநேரம் கே எஸ் பரத் மற்றும் அசாருதீன் ஆகியோரும் அரை சதத்தையும் விளாசினர், மிக நீண்ட காலமாக ஐபிஎல் கிண்ணம் எதையும் வெற்றி கொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஆர்சிபி, இப்போது வில்லியர்ஸ் அதிரடி சதம் அடித்து ஆரம்பித்து வைக்க இந்த பருவகாலம் வெற்றிகரமானதாக அமையும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
முழுமையான வீடியோவைப் பாருங்கள்.
????
Bold Diaries: RCB’s Practice Match
AB de Villiers scores a century, KS Bharat scores 95 as batsmen make merry in the practice match between Devdutt’s 11 and Harshal’s 11.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/izMI4LCSG1
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 15, 2021