அரவிந்த தலைமையில் புதிய கிரிக்கெட் குழு ..

அரவிந்த தலைமையில் புதிய கிரிக்கெட் குழு ..

விளையாட்டுத்துறை அமைச்சரால் இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்காக புதிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவில் முன்னாள் இலங்கை அணித்தலைவரும் நட்சத்திர ஆட்டக்காரருமான அரவிந்த டி சில்வா தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குழுவில் ரொஷான் மஹாநாம , முத்தையா  முரளிதரன் , குமார்  சங்கக்கார ஆகியோர் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்த குழுவில் மஹேல ஜெயவர்த்தன, மற்றும் ரஞ்சித் பெர்னாண்டோ ஆகியோரது பெயரும் இடம்பெற்றிருக்கிறது என செய்திகள் வெளிவந்திருந்தாலும், அவர்கள் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் உள்வாங்கப்படவில்லை.

இந்த ஆலோசனைக்கு குழு இலங்கை கிரிக்கெட் அபிவிருத்தி தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனைகள் முன்வைப்பதோடு அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா எனவும் கண்காணித்து கிரிக்கெட்டின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுவார்கள் என்று நம்பப்படுகின்றது.

Previous articleIPL விளையாட ஆசைப்படும் அவுஸ்திரேலிய வீரர்.
Next article3 போட்டிகள் 3 சதம் -மிரள வைக்கும் ஜோ ரூட்.