Syed Mushtaq Ali Trophy இன் முதலாவது அரை இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது டினேஷ் கார்த்திக் இன் தமிழ் நாடு அணி.
அரை இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை பெற்று கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தமிழ் நாடு அணி அருண் கார்த்திக் இன் 89 ஓட்டங்கள் உதவியுடன் இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.